CITU

பாஜகவை வீழ்த்த சிஐடியு மாநிலக்குழு முடிவு

0

12 . 03.2024 அன்று  சிஐடியு மாநிலக்குழு கூட்டம்  மாநில தலைவர் தோழர். அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை, பாஜகவை ஆதரிக்கும் அதிமுக உள்ளிட்ட இதர கட்சிகளை தோற்கடிக்கும் விதமாக தீவிர பிரச்சாரம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு அவசரகதியாக குடியுரிமை சட்ட விதிகளை அறிவித்து மக்களை துண்டாடும் முயற்சியை எதிர்த்து பிரச்சாரம் மற்றும் இயக்கங்கள் நடத்துவது.

மத்திய பொதுத்துறையான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 7சதவீத பங்கு விற்பனையை கைவிடவேண்டும்.

மின்வாரிய சீரமைப்பு தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்திட வேண்டும்.

தமிழக அரசிற்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களான மின்சார, போக்குவரத்து, டாஸ்மாக், உள்ளாட்சி உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்யவேண்டும்.

தமிழ்நாடு உள்ளாட்சி, ஊராட்சி நிறுவனங்களில், அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும்.

உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உள்ளாட்சி,  ஊராட்சி மற்றும் மருந்து விற்பனை பிரதிநிதிகள்களுக்கான  குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும்.

நெல்கொள்முதல் நிறுவனங்களில் பல ஆண்டுகளாக பணிபுரியும் பருவகால பணியாளர்களை நிரந்தரம் செய்யவேண்டும்,

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் அனைத்து ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்து பணி தொடர்ச்சியுடன் நிலுவை தொகை உள்ளிட்ட அனைத்து பயன்களும் வழங்கவேண்டும். காலிபாட்டில்கள் திரும்பபெறும் திட்டத்தை நிருத்திவைக்கவேண்டும். டாஸ்மாக் கடைகளை முடிவிட்டு மனமகிழ் மன்றம் என்ற பெயரில்  FL-2 லைசன்ஸ் வழங்குவதை நிறுத்தப்படவேண்டும்.

நாகப்பட்டிண மாவட்டத்தில் உள்ள உள்நாட்டு மீனவர்களின் உடமைகள் மற்றும் உயிர்களை பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இராமநாதபுரம் மாவட்டம்  மோர் பண்ணை, திருவாடளை தாலுக்கவில்  பணியாற்றி வரும் மீனவர்களை தாக்கியும், தொடர்ச்சியாக மீன்பிடி தொழிலை செய்யவிடாமல் தடுக்கும் அரசு மட்டும் காவல் துறையை கண்டித்து தீர்மானம்.

போக்குவரத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான பஞ்சப்படியை உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி  உடனடியாக வழங்கவேண்டும்.

நலவாரிய துறையில் அழிந்துபோன லட்சகணக்கான தரவுகளை மீட்டெடுக்கவேண்டும், பதிவு , புதுப்பித்தல் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டும். மீண்டும் நேரடி பதிவை துவக்கவேண்டும்.

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தி தீர்வுகாண வேண்டும்.

கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் – தமிழ்நாடு முழுவதும் சிஐடியு இயக்கங்கள்

Previous article

அகில இந்திய அங்கன்வாடி சம்மேளனத் தலைவரை மிரட்டாதே

Next article

Comments

Comments are closed.