Articles

16 பிப்ரவரி 2024 நாடு தழுவிய அளவில் மாபெரும் அணிதிரட்டல்

0

16 பிப்ரவரி 2024 நாடு தழுவிய அளவில் மாபெரும் அணிதிரட்டல் –மற்றொரு தீர்க்கமான வர்க்க நடவடிக்கை!!

ஏ.ஆர்.சிந்து

தீவிர வலதுசாரி அரசியல் அமைப்பான பாஜகவின்  பேரழிவுகரமான தொழிலாளர்-விவசாயி மற்றும் மக்கள்-விரோதக் கொள்கைகளில் இருந்து நாட்டைக் காப்பாற்ற நாடு தழுவிய போர்க்குணமிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இந்திய உழைக்கும் மக்கள் – தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.  சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் மத்திய தொழிற்சங்கங்கள், தொழில்துறை கூட்டமைப்புகள், சங்கங்களின் கூட்டுத் தளம் சார்பாக  16 பிப்ரவரி 2024 அன்று தொழில்/துறை வேலைநிறுத்தம் மற்றும் கிராமப்புற பந்த் ஆகியவற்றுடன் இணைந்து நாடு தழுவிய அளவில் பெரும் அணிதிரட்டலுக்கான அறைகூவல் விடுத்துள்ளது. இந்தியாவில் நவீன தாராளவாத தாக்குதலுக்கு எதிராக ஒரு வர்க்க மற்றும் வெகுஜன இயக்கத்தை வளர்ப்பதற்கான தொடர்ச்சியான மற்றும் நிலையான செயல்முறை. தற்போதைய நெருக்கடியான கட்டத்தில் இது முக்கியமான வெகுஜன நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கும்.

இவ்வளவு பெரிய வெகுஜன நடவடிக்கைக்கான இந்த முதல் கூட்டு அழைப்பு ஒரு குறுகிய கால இடைவெளிக்குள் அறிவிக்கப்பட்டது.  ஆம், உண்மை! ஆனால் இது மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் கூட்டுத் தளத்தின் ஓராண்டு கூட்டு மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் ஒன்றாகும். மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல்களில் பிஜேபியின் சமீபத்திய வெற்றியின் பின்னணியில் இது நடக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது, இது அனைத்துப் பொருளாதாரத் துறைகளிலும், அனைத்து ஜனநாயக அமைப்புகளிலும் பிஜேபி-ஆர்எஸ்எஸ் கூட்டணியின் கொடூரமான வெளிப்படையான தாக்குதலை மேலும் துரிதப்படுத்துகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவை அரசியல் நோக்கத்திற்காக மதத்தைப் பயன்படுத்தும் அப்பட்டமான முயற்சி. இத்தகைய இயக்கம் மற்றும் வேலைநிறுத்தம் நடத்த வேண்டிய கட்டாயம் என்பது  காலத்தின் தேவை.

இவ்வளவு குறுகிய காலத்திற்குள் இந்த கார்ப்பரேட் வகுப்புவாத இணைப்புக்கு எதிராக ஒட்டுமொத்த மக்களையும் அணிதிரட்டுவது மிகவும் சவாலான பணியாகும். அதே சமயம், கடந்த சில ஆண்டுகளில் வர்க்க இயக்கங்கள் கட்டியெழுப்பிய தொடர்ச்சியான வேகத்தையும், தொழிலாளர் வர்க்கம் மற்றும் விவசாயிகளின் பல்வேறு பிரிவுகளின் தொடர்ச்சியான போராட்டங்களையும் பார்க்கும்போது, உழைக்கும் மக்களின் விருப்பம் வெளிப்படையானது. நிச்சயமாக, கடந்த பதினைந்து நாட்களில் மோசமான தாக்கி விட்டு ஒடுதல் (‘ஹிட் அண்ட் ரன்) சட்டத்திற்கு’ எதிராக டிரைவர்கள் மற்றும் லாரி  நடத்துநர்களின் தன்னிச்சையான எதிர்ப்பு, வர்க்க நடவடிக்கைகளின் வலிமை மற்றும் சாத்தியகூறுகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்றே கூறலாம்.

துறைசார் மற்றும் தொழில்துறை வேலைநிறுத்தங்களை அமைப்பு சார்ந்த, அமைப்பு சாரா தொழிலாளர்கள் நடத்துவது, விவசாயிகள், விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்கள் கிராமப்புற பந்த் ஆகியவற்றை நடத்துவது என்று திட்டமிடப்பட்டது. மேலும்,  இந்த பிரிவு தொழிலாளர்களின் அதிகபட்ச அணிதிரட்டலை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மற்ற அனைத்து பிரிவு மக்களும் உள்ளூர் மற்றும் மாவட்ட அளவில் தங்கள் அமைப்புகளின் மூலம். இன்னும் 100 நாட்களுக்குள் நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மக்களின் பிரச்சினைகளை மீண்டும் அரசியல் விவாதத்திற்கு உட்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை அமையும். இனவாத நவீன -பாசிச நிகழ்ச்சி நிரலை எதிர்த்துப் போராடுவதற்கும், நவீன தாராளமய எதிர்ப்புப் பொருளாதாரக் கொள்கை மாற்றுகளைச் சுற்றி பிஜேபிக்கு மாற்றாக ஒரு அரசியலை உருவாக்குவதற்கு இது மிக முக்கியமானதாகும். மாற்றுக் கொள்கை முன்மொழிவுகளால் மட்டும் தான் உண்மையான மாற்றை உருவாக்க முடியும்.

சர்வதேச பின்னணி.

முதலாளித்துவ அமைப்பு தொடர்ந்து நெருக்கடியில் சிக்கி மோசமடைந்து வருகிறது. மேலாதிக்கத்திற்கான ஏகாதிபத்திய சக்திகளின் வெறித்தனமான நடவடிக்கைகள் காஸாவில் கட்டவிழ்த்து விடப்பட்டதைப் போல போர்கள், மோதல்கள் மற்றும் இனப்படுகொலை தாக்குதல்களுக்கு இட்டுச் செல்கிறது. வேகமாக மாறிவரும் புவிசார் அரசியல் சூழ்நிலை ஒருமுனை உலகிற்கும் மற்றும் ஒழுங்கிற்கும் சவால் விடுகிறது.

உழைப்பு மற்றும் மூலதனத்திற்கு இடையிலான அடிப்படை முரண்பாடு  காட்டுமிராண்டித்தனமான விகிதாச்சாரத்திற்கு இட்டு செல்கிறது. இது குறிப்பாக  உண்மையான ஊதியங்கள் (சீனாவைத் தவிர) குறைந்து வருவதிலும், பெரும்பான்மையான தொழிலாளர்களின் வேலை நேரம் அதிகரித்தலிலும் பிரதிபலிக்கிறது. 2020-22 இல் தொழிலாளர்கள் ஆறு வாரங்களுக்கு ஊதியத்தை இழந்ததாக ILO தரவு காட்டுகிறது. பாலின இடைவெளியைப் பிரதிபலிக்கும் வகையில் ஆண்கள் உலகளவில் சம்பாதிக்கும் தொகையில் 82 சதவீதம் மட்டுமே பெண்கள் சம்பாதிக்கிறார்கள்.

பல நாடுகளில் வலதுசாரி சக்திகள் பலம்பெற்று  நவீன – பாசிச சக்திகள் அதிகாரத்திற்கு வந்து உலக அரசியலில் ஒரு தெளிவான வலதுசாரி மாற்றம் உருவாகி வருகிறது. உலக அரசியலில் பொதுவான போக்கு அரசியல் வலதுசாரி மாற்றமாக இருந்தாலும், சில நாடுகளில் சமீபத்திய தேர்தல்களில், தீவிர வலதுசாரிகள் பின்னடைவை சந்தித்தனர். இது சர்வாதிகார வலதுசாரி அரசாங்கங்கள் மற்றும் அவர்களின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் அதிருப்தி அதிகரித்து வருவதைக் குறிக்கிறது.

பெருநகர மூலதனத்திற்கும் பெருநகர தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான முரண்பாடு வளர்ந்து வருகிறது. அண்மைக் காலங்களில்  வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் பெரும் எழுச்சியைக் கண்டுள்ளது. இந்த நாடுகளில் பல விவசாயிகளும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இது உலக மூலதனத்தின் மீதான எதிர் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தும் சாத்தியக்கூறுகளை உருவாக்குகிறது.

இந்தியாவில் நிலைமை

இந்த நவீன தாராளமய போக்குகளுக்கு இந்தியா ஒரு உன்னதமான உதாரணம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க வடிவமைப்பிற்கு மோடியின் அரசாங்கத்தில் உள்ள கார்ப்பரேட் வகுப்புவாத உறவு, நாட்டின் நலன்களை முழுவதுமாக அடகு வைத்துள்ளது. இராணுவ, மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை ஆழப்படுத்தி அமெரிக்காவின் இளைய பங்காளியாக செயல்படுகிறது. காலனித்துவ எதிர்ப்பு போராட்டங்கள் மூலம் உருவான சுயேட்சையான போர் திறன் சார்ந்த நடவடிக்கைகள் இந்திய  வெளியுறவுக் கொள்கையை மோடி அரசு மறுத்துள்ளது. சிஐடியு மாநாடு சுட்டிக்காட்டியபடி, பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகம் ஆகிய அனைத்துப் பிரிவுகளின் மீதும் இந்த ஆளும் ஆட்சியின் ஒட்டுமொத்த சர்வாதிகாரத் தாக்குதல் உள்ளது.

நாட்டின் இயற்கை வளங்கள், பொதுச் சொத்துக்கள், தொழில் மற்றும் சேவைகளில் வெட்கக்கேடான, வெளிப்படையான கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட மோடிக்கு விருப்பமான ஒருசில தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு சூறையாட மோடி அரசு வழிவகை செய்து வருகிறது. அரசு கருவூலத்தில் இருந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 1.97 லட்சம் செயல்திறன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம், கடற்பகுதியில் ஒவ்வொரு ஐநூறு கிலோ மீட்டரில் துறைமுகங்களை உருவாக்கி அதானிக்கு தாரை வார்ப்பது, திறந்த ஏக்கர் உரிமக் கொள்கை (OALP IX) 2.23 லட்சம் சதுர கிமீ பரப்பளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு பகுதிகளை ஏலத்திற்கு விடுவது,  எடுப்பது, முக்கியமான கனிமங்களின் வணிகச் சுரங்கத்தை அனுமதிக்கும் சட்டம், மைன் டெவலப்பர் & ஆபரேட்டர் (MDO) வழியின் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி இந்திய நிறுவனத்தின் கீழ் பெரும் நிலக்கரி இருப்புக்களை தனியாரிடம் ஒப்படைப்பது போன்ற நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. இந்தியா மிகவும் அபாயகரமான பொதுக் கடனில் உள்ளது.

விவசாயிகளின் மீதான தொடர் சுரண்டல் தீவிரமாகி விவசாயத்தொழில் மிகவும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களின் தற்கொலைகள் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து துன்பகரமான இடம்பெயர்வு தீவிரமாகிறது. விவசாயத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் விலையைக் கையாளுதல் மற்றும் முன்பேர  வர்த்தக கொள்கையின் மூலம் விவசாயிகளை கொள்ளையடித்து பெரும் லாபம் ஈட்ட அனுமதிக்கப்படுகிறது. அடிப்படை உரிமைகளுக்கான பட்ஜெட்டில் கடுமையான வெட்டுக்கள் மற்றும் நூறு நாள் வேலை உறுதி திட்டத்தில் பயனாளிகளைக் குறைப்பது மற்றும் ஆதார் இணைக்கப்பட்ட கட்டண முறையின் மூலம் பணம் செலுத்துவதைத் தடுப்பது போன்ற நடவடிக்கைளினால் கிராமப்புறங்களில் கடுமையான துயரம், வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது.

கடந்த நாற்பது ஆண்டுகளில் வேலையில்லா திண்டாட்டம் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒப்பந்தம் மற்றும் முறைசாரா செயல்முறைகள் மூலம் வேலைகளின் தரம் மேலும் குறைந்துள்ளது. தேசிய புள்ளி விவரக் கணக்கெடுப்பின்படி ஒரு நகர்ப்புற இந்தியத் தொழிலாளி வாரந்தோறும் 60 மணிநேரம் 47 நிமிடங்களை நேரடி வேலை மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளில் செலவிடுகிறார். இப்போது, பல மாநிலங்களில் 12 மணிநேர வேலை நாள் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. சர்வ தேச தொழிலாளர் அமைப்பின் படி, நீண்ட வேலை நேரத்தால் (55 மணிநேரத்திற்கு மேல்) 25% தொழில் மரணங்கள் ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக, தொழிலாளர்களின் உண்மையான ஊதியம் மற்றும் உற்பத்திச் செலவில் ஊதியப் பங்கு ஆகியவை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன, ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, ‘வளர்ச்சி மாதிரி’ என குறிபிடப்படும் குஜராத்தில் ஒரு பண்ணை தொழிலாளிக்கு 25 நாட்கள் வேலை கிடைத்தாலும், மாதம் ரூ.6047.5 தான் கிடைக்கிறது.

மோடி அரசு, தொழிலாளர் வர்க்கம் மற்றும் விவசாயிகளின் மீதான மனிதாபிமானமற்ற சுரண்டலின் விளைவுகளும், ‘நேரடியான பலன் மற்றும் பண பரிமாற்றம்’ ஆகியவை நாட்டின் மொத்த வருமானத்தில் இந்தியாவில் உள்ள மேல் தட்டு பணக்கார ர்களில் பத்து சதவீத த்தினர் மொத்த தேசிய வருமானத்தில் 72 சதவீத்ததையும் மேலடுக்கில் உள்ள 1 சதவீதத்தினர் 40.5சதவீதத்தையுமகையகப்படுத்திருக்கிறார்கள். இதனால் நம் நாட்டில் சமத்துவமின்மை அனைத்து நிலைகளிலும் பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில் அடித்தட்டு 50 சதவீத ஏழைகளின் பங்கு வெறும் 3சதவீதமாகக் குறைந்துள்ளது. அதே சமயம், 50% ஏழைகள் GSTயில் 64% செலுத்துகிறார்கள், அதே நேரத்தில் 10% பணக்காரர்கள் 3% மட்டுமே செலுத்துகிறார்கள். இந்த புள்ளி விவரங்கள்  சுரண்டப்படும் வர்க்கங்களின் ஒற்றுமைக்கான அடித்தளத்தையும் உருவாக்குகிறது.

இவை அனைத்தும் மறைக்கப்பட்டு, ஆர்எஸ்எஸ் தலைமையிலான போலிச் செய்தி சமூக ஊடக வலைப்பின்னல்களின் கார்ப்பரேட் பிரச்சார இயந்திரத்தின் மூலம் இந்திய ஜிடிபி வளர்ச்சி பெற்றுள்ளது, டிரில்லியன் டாலர் பொருளாதாரம், இந்தியா உலகத் தலைவராக மாறுவது மற்றும் பல துறைகளில்  பிரகாசமாக வளர்ந்து வருகிறது என்ற சித்திரம் முன்வைக்கப்படுகிறது. அரசாங்கத்தின் ‘மோடி உத்தரவாதம்’ திட்டங்கள் இதன் மூலம் முன்வைக்கப்படுகின்றன, அதேசமயம் அடிப்படை உரிமைத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் கடுமையாகக் குறைக்கப்படுகின்றன. விவசாயிகள் கடும் நெருக்கடியில் இருக்கும் வேளையில் கடந்த 5 ஆண்டுகளில் பயன்படுத்தப்படாத ரூ.1 லட்சம் கோடி நிதியை விவசாய அமைச்சகம் திருப்பி அனுப்பியதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆர்எஸ்எஸ்-பிஜேபி இணைந்து, கார்ப்பரேட் நேச பலத்தின் மூலம் ராமர் கோயிலைச் சுற்றி நாட்டில் ஒரு வகுப்புவாத வெறியை உருவாக்கி வருகிறது. வகுப்புவாத விஷத்தை பரப்புவதற்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளில் இது கட்டமைக்கப்படுகிறது. பாலஸ்தீன மக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு மற்றும் தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு மத நிறத்தை கொடுப்பதில் அவர்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளனர். அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா இந்திய அரசியலமைப்பு சட்டத்தை முற்றிலும் மீறும் வகையில் அரசு நிகழ்வாக மாற்றப்பட்டுள்ளது. இந்த செயல்பாட்டில் மதச்சார்பற்ற மக்களில் பெரும் பகுதியினரை ஈடுபடுத்த வகுப்புவாத சக்திகள் முயற்சிக்கின்றன.

வரலாற்றுப் பணி

கடந்த காலங்களில் பாசிச ஆக்கிரமிப்பின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தொழிலாளி வர்க்கமும் விவசாயிகளும்தான், உச்சபட்ச தியாகங்கள் மூலம் போராடி ஜனநாயக ஒழுங்கை மீட்டெடுத்தனர். முதலாளித்துவ உலக ஒழுங்கின் மிகக் காட்டுமிராண்டித்தனமான வடிவத்தின் முறையான நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, நமது நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள நிலைமை மிகவும் கடினமானதாகவும், சவாலாகவும் இருந்தாலும், தற்போதைய முதலாளித்துவத்தின் ஒழுங்கின் திவால்நிலையையும், அமைப்பை மீறுவதற்கான புறநிலை நிலைமைகளின் பக்குவத்தையும் அம்பலப்படுத்துகிறது. இங்கு நமது நாட்டில், கடந்த முப்பதாண்டுகளில் நவதாராளமயத்திற்கும் தற்போது அதன் நவபாசித்திற்கும் மிகப்பெரும் சவாலாக இருந்தது ஒன்றுபட்ட உழைக்கும் வர்க்கம் மற்றும் விவசாயிகள் இயக்கமும்தான் என்று பெருமையுடன் கூறிக்கொள்ளலாம். இந்தியாவில் நவதாராளவாத எதிர்ப்புப் போராட்டம் கடந்த மூப்பதாண்டுகளாக நமது தலைமையில் மிக நுட்பமாகவும் பொறுமையாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

1991 நவம்பரில் இடதுசாரி ஆதரவு பெற்ற மத்திய தொழிற்சங்கங்களால் அழைப்பு விடுக்கப்பட்ட முதல் பொது வேலைநிறுத்தத்தில் இருந்து, 2022 மார்ச்சில் நடந்த 21வது பொது வேலைநிறுத்தம் வரை, ஒன்றிணைந்த தொழிற்சங்கத் தளத்தால்அறைகூவல் விடுக்கப்பட்டு , SKM ஆல் ஆதரவளிக்கப்பட்டு, இப்போது இந்தக் கூட்டு அழைப்பு வரை  புரட்சிகர தொழிற்சங்க இயக்கம் கடந்து வந்த தூரம் என்பது வரலாறாகும். எண்ணற்ற வேலைநிறுத்தங்கள், போராட்டங்கள், பிரச்சாரங்கள் மற்றும் அணிதிரட்டல்களின் மூலம் மத்திய தொழிற்சங்கங்கள்  மற்றும் சம்யுக்த கிசான் மோர்சா வின் தொழிற்துறை மற்றும் துறைசார் சங்கங்கள்  வேலைநிறுத்தங்கள் மற்றும் கிராமின் பந்த் ஆகிய இயக்கங்களுக்கு அறைகூவல்  விடுத்துள்ளது. ஆட்சியில் உள்ள நவீன பாசிச சக்திகள் பல எதேச்சாதிகார நிகழ்ச்சி நிரல்களில் வெற்றி பெற்ற போதிலும், வரலாற்று சிறப்புமிக்க  கிசான் போராட்டத்தின் காரணமாக அவர்கள் மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தொழிலாளி- விவசாயிகள் ஒற்றுமை – எதிர்ப்பின் அரணாக.

“உழைக்கும் மக்களின் பரவலான போராட்டங்கள் இருந்தபோதிலும், பெரும்பாலான நாடுகளில் வலதுசாரிகளின் எழுச்சிக்குக் காரணம், சமூக ஜனநாயகவாதிகளின் துரோகமும், பலவீனமான இடதுசாரிகளின் தோல்வியும் அல்லது குழப்பமும்தான். ஒரு மாற்று பொருளாதார ஒழுங்கையும், தொடர்ச்சியாக வர்க்க  போராட்டத்தையும் நடத்துவதில் பலவீனம் உள்ளது.என சிஐடியுவின் சமீபத்திய ஆவணம் ஒன்றில் சுட்டிக் காட்டுகிறது.

நமது நாட்டில் நவீன தாராளவாத ஏகாதிபத்தியத்திற்கும் நவீன பாசிசத்திற்கும் எதிரான எதிர் தாக்குதலின் மிக முக்கியமான அம்சம் தொழிலாளர் விவசாயி ஒற்றுமையாகும். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் என்ற இரண்டு வரலாற்று தளங்களின் செயல்பாட்டில் வரலாற்று ரீதியாக தோன்றிய மற்றும் உணர்வுபூர்வமாக கட்டமைக்கப்பட்ட ஒற்றுமை வர்க்க ஒற்றுமையை செயல்படுத்த கீழ் மட்டம் வரை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த தளங்களின் கூட்டு மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கான அறைகூவல்கள் இந்த திசையில் திட்டமிடப்பட்டன. குறைந்த பட்ச ஊதியம், எட்டு மணி நேர வேலை, குறைந்தபட்ச ஆதரவு விலை, வேலைவாய்ப்பு உத்தரவாதம் மற்றும் உணவு, ஓய்வூதியம், வீடு, சுகாதாரம் மற்றும் கல்விக்கான உலகளாவிய உரிமைகள் ஆகிய கோரிக்கைகளில் அடிமட்டத்தில் உள்ள அடிப்படை உற்பத்தி வர்க்கத்தினரின் ஒற்றுமை, எதிர்ப்பின் அரணாக செயல்படும். நமது நாட்டில் வகுப்புவாத வெறியால் நீடிக்கப்பட்ட நவதாராளவாத ஒழுங்கு. அதைச் சுற்றி ஒரு மக்கள் இயக்கத்தை உருவாக்குவதே பெரிய பணி.புரட்சியாளர்கள் ‘சடங்குவாதிகள்’ என்றும், தாராளவாதிகள் ‘வளர்ச்சிக்கு எதிரானவர்கள்’ என்றும் கேலி செய்த போது, கடந்த மூப்பதாண்டுகளாக நீடித்த நவீன தாராளமய எதிர்ப்புப் போராட்டங்கள் –  நமது அமைப்புகள் நடத்திய பொது வேலைநிறுத்தங்கள் உட்பட – ஒரு பரந்த ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கட்டியெழுப்புவதில் வெற்றி பெற்றுள்ளன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். விவசாய வர்க்கங்களின் ஒற்றுமை மற்றும் தற்போது வளர்ந்து வரும் தொழிலாளர் விவசாயிகளின் ஒற்றுமை இவை இரண்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகளின் போராட்டத்தின் வெற்றியில் தீர்க்கமானவை. ஆட்சியில் வகுப்புவாத நவ பாசிச சக்திகளுக்கு எதிரான எந்தவொரு எதிர் தாக்குதலும் – பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக அல்லது சமூக கலாச்சார ரீதியாக – இந்த வர்க்க ஒற்றுமை மற்றும் போராட்டங்களின் அடிப்படையில் மட்டுமே கட்டமைக்கப்பட முடியும்.

இந்த ஒற்றுமையை, செயல்களில் மேலும் முன்னெடுத்துச் செல்வது, ஒருங்கிணைப்பது என்பது ஒரு வரலாற்றுப் பணியாகும், இந்த பணியை நாம் வரும் 16. பிப்ரவரி அன்று ஒரு தீர்க்கமான நடவடிக்கையின் மூலம் மேற் கொள்கிறோம். நாம் செய்ய வேண்டியது மக்களின் உண்மை பிரச்சனைகளை மக்களிடம் கொண்டு செல்வது அதற்கான மாற்று கொள்கைகளை பிரச்சாரம் செய்வது, வேலைநிறுத்தத்தின் மூலம் வர்க்கவிரோதியை தடுப்பது, தேர்தலுக்கு முன் ஒரு அரசியல் முன்னெடுப்பை கட்டியெழுப்புவதற்காக மக்களை அணிதிரட்டுவது என்பது தான் இது. கார்ப்பரேட் வகுப்புவாத கள்ள தொடர்பின் ‘வளர்ச்சி’ மற்றும் ‘தேசிய இனவெறி வாத’ கதைகளுக்கு மாற்றுகளை உருவாக்கவும் உதவியாக இருக்கும்.

தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆதரவாக வர்க்க சக்திகளின் சமநிலையை மாற்றுவதற்கான ஒரு நீடித்த மற்றும் கடினமான போராட்டம், இதில் நாம் மிகுந்த கடுமையுடனும் உறுதியுடனும் முன்னேற வேண்டும். இந்த வரலாற்றுப் பணியை நிறைவேற்றுவதற்கு நாம் நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். என சிஐடியு சுட்டிக்காட்டியுள்ளது

இதுவரை இருக்கும் அனைத்து சமூகங்களின் வரலாறும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே” என்று கம்யூனிஸ்ட் அறிக்கை நமக்குக் கற்பித்ததை மறந்துவிடக் கூடாது.

CITU Tamilnadu

ரயில்வே தனியார்மயத்தை எதிர்த்து – DREU ஆர்ப்பாட்டம்.

Previous article

பீடி தொழிலாளர் ஆர்ப்பாட்டம்.

Next article

Comments

Comments are closed.