Struggles

தொழிலாளி வர்க்க வெற்றிகள் 2023 !

0
  • தொழிலாளி வர்க்க வெற்றிகள் 2023 !
  • 2023 ஜனவரி 1-ல் தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் தொழிலாளர் கட்சி தலைவர், முற்போக்காளர் ,லூலா டா சில்வா ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். தேர்தலில் தீவிர வலது சரியான ஜெய்ர் பொல்ஸானாரோவை தோற்கடித்தார்.
  • 2023 மார்க் 12-ல் மகாராஷ்டிராவில் பத்தாயிரம் விவசாயிகள் நாசிக் முதல் மும்பை வரை 200 கிலோ மீட்டர் நீண்ட நடை பயணத்தை தொடங்கினர். ஆறு நாட்களில் விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு ஏற்க வைத்த வெற்றியைப் பெற்ற இயக்கம் இது.
  • 2023 ஜூன் மாதம் தென்னாப்பிரிக்காவில் எஸ்காம் என்ற பொதுத்துறை மின்சார கம்பெனியுடன் நும்சா, தென்னாப்பிரிக்க உலோகத் தொழிலாளரின் தேசிய சங்கம், செய்த ஒப்பந்தம் மூலம் ,சிறந்த ஊதிய உயர்வு, அலவன்ஸ் மற்றும் ஒரு மொத்த தொகை பெற்றனர்.
  • அமெரிக்காவில் ஐந்து லட்சத்திற்கு மேல் தொழிலாளர் வேலைநிறுத்தம் செய்தனர் .கிட்டத்தட்ட 10 லட்சம் அமெரிக்கர் இரட்டை இலக்கத்தில் ஊதிய உயர்வு பெற்றனர். அமெரிக்காவின் மூன்று பெரிய ஆட்டோ மொபைல் கம்பெனி தொழிலாளர் ,ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு மற்றும் ஸ்டெல்லாண்டிஸ், ஹாலிவுட் நடிகர்கள், கலைஞர்கள், லாஸ் வேகாஸ், லாஸ் ஏஞ்சல்சில் ஓட்டல் தொழிலாளர்,  கெய்ஸர் பெர்மனன்டேயின் சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தவர்களில் முக்கியமானவர்கள்.
  • 2023 அக்டோபரில் மனிதகுலம் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த மூன்றாவது சர்வதேச மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னெஸ்பர்க் மாநகரில் கூடியது. முதலாளித்தவ நெருக்கடிக்கு சோசலிச மாற்று குறித்து மாநாடு விரிவாக விவாதித்தது.
  • காசா ,மேற்கு கரையில் பாலஸ்தீனியர் மீது 2023 அக்டோபர் ஏழு முதல் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலை ,ஏகாதிபத்தியம் மற்றும் காலனி ஆதிக்கத்தின் துர்நடத்தை மற்றும் கொடூரத்தை அம்பலப்படுத்தி உள்ளது .இதற்கு பிரமாண்டமான புதிய எதிர்ப்பலை, நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான மக்கள் பாலஸ்தீனியர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். காசாவில் உடனடி போர் நிறுத்தம் கோரி போராடுகின்றனர். 2023 நவம்பர் 4-ல் 100க்கும் மேற்பட்ட பெருந்திரள் பேரணிகள், வேலைநிறுத்தங்கள் உலகம் முழுவதும் நடைபெற்றன. வாஷிங்டனில் 5 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தெருக்களில் இறங்கி பாலஸ் தீனத்திற்கு ஆதரவாக போராடினர்.
  • அர்ஜென்டினாவில் தீவிர வலதுசாரி ஜேவியர் மிலே ஜனாதிபதியாக தேர்தலில் வெற்றி பெற்றது, தொழிலாளி வர்க்கத்திற்கு குறிப்பிடத்தகுந்த பின்னடைவை ஏற்படுத்தியது. ஆனாலும் அவரது சிக்கன சீரமைப்பு கொள்கைகளுக்கு எதிர்ப்பு வலுவாகி வருகிறது. அர்ஜெண்டைனா மக்கள், அரசின் ஒவ்வொரு தாக்குதலையும் எதிர்த்து போராட சூள் உரைத்து வருகின்றனர்.

CITU Tamilnadu

டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஊதிய உடன்பாடு..

Previous article

கார்ப்பரேட் மதவாத கூட்டணியை வீழ்த்துவோம்!

Next article

Comments

Comments are closed.