Press Release

கிக் ஊழியர்களை தொழிலாளர்களாக அங்கீகரிக்க புதிய சட்டமியற்றுக!

0

 

கடந்த சுதந்திர தினத்தன்று தமிழ்நாடு முதலமைச்சர், தனது சுதந்திர தின உரையில் வீடு தேடி உணவு கொண்டு செல்லும் ஊழியர்கள் மற்றும் ஒலா,  உபேர் ஒட்டுநர்களின் நலனை பாது காக்கும் விதமாக அவர்களுக்கு நலவாரி யம் அமைத்து பலன்கள் வழங்கப்படும் என்று கூறினார். அதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு இணையவழி தொழிலாளர்கள் (GIG Workers)  நலனை கருத்தில் கொண்டு நலவாரியம் அமை ப்பதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது என்பது வரவேற்கத் தகுந்த ஒன்று. அதே நேரத்தில்  இந்த நலவாரிய பலன்களுடன் அவர்களின் வேலை பாது காப்பு, வேலை நிலைமைகள், வேலை நேரம், குறைதீர்க்கும் முத்தரப்பு கமிட்டி மற்றும் குறைந்தபட்ச ஊதியம் என்பது மிக வும் அவசியமானது என சிஐடியுகருதுகிறது.  சட்டப் பாதுகாப்பு தேவை இந்திய அரசியலமைப்பு சட்டப்படி இவர்கள் வாழ்வதற்கான உரிய ஊதியம் மற்றும் இதர ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கடமை அரசுக்கும் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கும் உள்ளது. சர்வதேச தொழிலாளர் நிறுவனம் இந்த தொழிலாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது என்பதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். ஆகவே இந்த துறையில் பணிபுரியும் தொழிலாளர்களை தொழிலாளர்களாக அங்கீகரித்து அவர்களுக்கு உரிய சட்ட பாதுகாப்பு மற்றும் பலன்களை வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். அவர்களை குறைந்தபட்சம் கடை கள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வருவது என்பது பொருத்த மாக இருக்கும் என்று நம்புகிறோம்.  ஏனெனில் சுவிக்கி, சுமோட்டோ, டன்சோ  போன்ற நிறுவனங்கள் ஊழியர்களுக்கு எந்தவித பணி பாதுகாப்பு, உயிர் மற்றும் உடமை பாதுகாப்பிற்கான ஏற்பாடுகள் செய்வதில்லை. மேலும் வேலை நிலைமை கள், வேலை நேரம் குறைந்தபட்ச ஊதியம் போன்ற அடிப்படை தொழிலாளர் சட்டங்கள் மற்றும் தொழிற்சங்க விதிகள் அமலாக்காத நிலை உள்ளது. இவர்கள் தொழிலாளர்கள் இவர்களுக்கு இந்திய  நாட்டின் தொழிற்சட்டங்கள் பொருந்தும் என்பதற்கான அனைத்து ஆவணங்கள் எங்களது அமைப்பின் சார்பாக தொழிலாளர் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, தமிழக அரசு உடனடியாக இவர்கள் பலனடையும் வகையில்  இந்த ஊழியர்களை தொழிலாளர்களாக அங்கீகரித்து இந்திய தொழிலாளர் சட்ட பலன்கள் மற்றும் விதிகள் பொருந்தும் வகையில் சட்டம் இயற்றிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம் என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

CITU Tamilnadu

வெண்மணி தியாகபூமியில் தியாகிகளுக்கு வீரவணக்கம்…

Previous article

Comments

Comments are closed.