CITU Events

பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த, பலப்படுத்த வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மினி மாரத்தான்

0

பெரும் உற்சாகத்துடன் நடைபெற்றது.  தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு), முன் னெடுப்பில் பூவுலகின் நண்பர்கள், சென்னை மெட்ரோ ரயில் எம்ப்ளாயீஸ் யூனியன், போக்குவரத்து மற்றும் வளர்ச்சி கொள்கை ஆய்வு நிறு வனம், குடிமக்கள் நுகர்வோர், செயல்பாட்டுக் குழு, திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை  பெரியார் திராவிடர் கழகம் மற்றும்  அசார் ஆகிய பல்வேறு அமைப்பு களும் இணைந்து இந்த ஓட்டத்தை நடத்தின. குறிப்பிட்ட ஒரு கோரிக்கைக் காக ஒரே நாளில், மாநிலம் முழுவதும்  ஒரே நேரத்தில், 22 இடங்களில் ஒரு  மாரத்தான் நடப்பது இதுவே முதல் முறையாகும்.  இதில் மாணவர்கள், இளைஞர்கள், சிறுவர் – சிறுமியர் உற்சாகமாக கலந்துகொண்டனர்.  சென்னை பெசன்ட் நகர் கடற்கரை யில் நடைபெற்ற மினி மாரத்தானில் சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர். ஆண்களுக்கான ஓட்டத்தை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனும், பெண்களுக்கான ஓட்டத்தை பூவுலகின்  நண்பர்கள் அமைப்பின் கோ.சுந்தர்ரா ஜனும் தொடங்கி வைத்தனர். மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஓட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

CITU Tamilnadu

தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Previous article

சேலம் உருக்காலை சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Next article

Comments

Comments are closed.