தொழிலாளி -விவசாயி ஒற்றுமை தினம் நாடெங்கும் கடைபிடிப்பு!1982 ஜனவரி 19 இல் நடைபெற்ற முதல் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில், காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இந்தியா முழுவதும் பத்துக்கு மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பலியானார்கள். தமிழ்நாட்டின் காவல் துறையின் வெறிசெயலுக்கு பலியான திரு மெய்ஞானம் தியாகிகள் அஞ்சான், நாகூ ரான், மன்னார்குடி ஞானசேகரன் நினை வாக வீரவணக்க புகழஞ்சலி மற்றும் உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளி யன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.
செவ்வணக்கம்.
திருமெய்ஞானம் தியாகிகள் அஞ்சான்–நாகூரான் ஆகியோரின் 42-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அருகேயுள்ள திருமெய்ஞானத்தில் வெள்ளியன்று செவ்வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அகில இந்திய விவசாய சங்கத்தின் மாநில தலைவர் பெ. சண்முகம், சிஐடியு மாநில உதவி பொதுச்செயலாளர் திருச்செல்வன், சிஐடியு மாவட்ட செயலாளர் மாரியப்பன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன் மற்றும், தியாகி அஞ்சான் குடும்பத்தினர், சிஐடியு தொழிற்சங்கத்தினர், மாதர் – மாணவர் சங்கத் தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்
தியாகிகள் தினத்தை முன்னிட்டு, முறை சாரா தொழிலாளர்களுக்கு தேசிய நிதி ஆணையத்தை உருவாக்க வேண்டும். குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். அனைவருக் கும் சமூக பாதுகாப்புடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நிரந்தர தன்மை கொண்ட வேலைகளில் ஒப்பந்த, அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும். முதலாளிகளுக்கு ஆதரவாக போடப் பட்ட தொழிலாளர் நலச் சட்டத்தொகுப்பு திருத்தப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மற்றும் அகில இந்திய விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் இணைந்து கன்னியாகுமரி, கோவை, திண்டுக்கல், தஞ்சை, மதுரை மாநகர் மதுரை புறநகர், அரியலூர் தருமபுரி,ராமநாதபுரம், திருச்சி மாநகர் ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. வட சென்னை, திருப்பூர், செங்கல்பட்டு, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கருத்தரங்கங்கள் நடைபெற்றது. காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் செங்கொடி ஏற்றி சபதம் ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
Comments