Articles

டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஊதிய உடன்பாடு..

0

வெற்றி !வெற்றி !வெற்றி !
டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் தற்போது பெற்று வரும் இறக்குக் கூலியில் 18% (பதினெட்டு சதவிகிதம்) உயர்வு பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு.

டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களுக்கான
இறக்குக் கூலி உயர்வு குறித்து 27/12/23 ந்தேதி மாலை 6.00 மணிக்கு சென்னை தி.நகரில் உள்ள தமிழ்நாடு மதுபான உற்பத்தியாளர்கள் நல சங்க அலுவலகத்தில்பேச்சுவார்த்தை நடைபெற்றது. மதுபான உற்பத்தியாளர்கள் சார்பில் SNJ உரிமையாளர் திரு .ஜெயமோகன் ENRIGA உரிமையாளர் ,திரு.ராமி ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். சம்மேளனத்தின் சார்பில் தலைவர் ஆர் வெங்கடபதி
சிறப்புத் தலைவர் S குணசேகரன் , பொதுச் செயலாளர் இரா .அருள்குமார் , துணைத் தலைவர் அ .பிச்சைமுத்து , துணைச் செயலாளர் எம். எஸ் பீர் முகமது , மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் , நிர்வாகிகள் சென்னை G. கோதண்டன் ராதாகிருஷ்ணன் , P. ஜீவானந்தம் , ஓம்பிரகாஷ், குடந்தை T திருச்செல்வம் , சேலம் ஆர் , சீனிவாசன் V.வெற்றிவேல் , தி. சிவக்குமார் ,திண்டுக்கல் J- முகமதுல்லா , திருப்பூர் சி.கார்த்திக்
கோவை M.H . ஜஹாங்கீர் , பொள்ளாச்சி ராஜாராம்
மதுரை எம்.முனீஸ்வரன்ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையின் முடிவாகதற்போது பெற்று வரும் இறக்குக் கூலியுடன் 18% பதினெட்டு சதவிகிதம் உயர்த்தி வழங்குவது என்றும் இக்கூலி உயர்வை 01.01.2024 முதல் மூன்றாண்டுகள் அமுல்படுத்தப்படும என்றும் நிர்வாக தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டு , சம்மேளனத்தின் சார்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. .

CITU Tamilnadu

தொழிலாளி வர்க்க வெற்றிகள் 2023 !

Next article

Comments

Comments are closed.