Articles

சேலம் உருக்காலை சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

0

மத்திய அரசு, செயில் நிர்வாகம் மற்றும் சேலம் உருக்காலை நிர்வாகத்தை கண்டித்து இன்று 08.02.2023 காலை 8 மணிக்கு சேலம் உருக்காலை, கேட் எண்:2 சேலம் உருக்காலை சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்1.பொதுத்துறைகளை விற்று பணம் மயமாக்கல் என்ற முடிவினை கைவிடக்கோரியும்.
2.சேலம் உருக்காலை தனியார்மைய தொடர் முயற்சிகளை கைவிடக்கோரியும்.
3.பத்ராவதி உருக்காலை மூடுதலுக்கான உத்தரவை வாபஸ் பெற கோரியும்
4. தமிழக அரசின் கோரிக்கையான சேலம் உருக்காலை வளாகத்தில் ராணுவ தளவாட உற்பத்தி மையம் அமைத்திட கோரியும்.5. SAIL தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைவாக இறுதிபடுத்த கோரியும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரியும்
6.சேலம் உருக்காலை நகரியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தோழர் தோழர் R.சித்தையன், (தலைவர் சேலம் உருக்காலை சிஐடியு) தலைமை தாங்கினார், தோழர்கள் S.K தியாகராஜன் (தலைவர் சிஐடியு சேலம் மாவட்ட சாலை போக்குவரத்து), P. பன்னீர்செல்வம் (மாவட்ட துணைத் தலைவர் சிஐடியு), KP சுரேஷ் குமார் (செயலாளர் சேலம் உருக்காலை சிஐடியு). அவர்கள் கண்டன உரையாற்றினர்.

CITU Tamilnadu

பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த, பலப்படுத்த வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மினி மாரத்தான்

Previous article

வாகன நிறுத்தப் போராட்டம்

Next article

Comments

Comments are closed.