பேடர் இந்தியா தொழிற்சாலை நிர்வாகம். முன் அறிவிப்பு ஏதும் இன்றி தொழிற்சாலையில் இருந்து தொழிலாளர்கள் வேலை செய்யும் இயந்திரங்களை இராணி பேட்டைக்கு இடமாற்றம் செய்ய முயற்சித்தது. அதை தடுத்து தொழிலாளர்கள் உள் இருப்பு வேலை நிறுத்தத்தை தொடங்கினர். தொழிற் சங்கம் சார்பில் 2K தொழில் தாவா எழுப்பப்பட்டு வழக்கு நடத்தி அதன் மூலம் இன்று 03.07.2024 DCL முன்பு சுமூக தீர்வு காணப்பட்டது.
தொழிலாளர்கள் தற்போது பணியாற்றும் மறைமலை நகர் பகுதியில் இருந்து தொழிற்சாலை இடமாற்றம் செய்யும் இராணிப்பேட்டை சிப்காட் வரை வாகன வசதி செய்து கொடுத்து தொழிலாளர்களை அதே பணி சர்வீஸ் தொடர்ச்சியுடன் பணி இட மாற்றம் செய்ய நிர்வாகம் ஒப்புக்கொண்டு DCL அவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.
Articles
Comments