ArticlesCITU

ரயில்வே தொழிற்சங்கத்தின் திருச்சி பொன்மலையில் பொன்விழா

0

8 மணிநேர வேலை, தற்காலிக ஊழியர் நிரந்தரம், தேவைக்கேற்ற குறைந்த பட்ச ஊதியம் அல்லது பொதுத்துறைக்கு இணை யான ஊதியம், 8.33 சத வீதம் போனஸ் போன்ற நியாயமான கோரிக்கை களுக்காக டிஆர்இயு உள்ளிட்ட 130-க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து 1974 இல் ரயில்வே வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தின. இப்போராட்டத்தின் பொன்விழா நிகழ்வு டிஆர்இயு, சிஐடியு சார்பில் 8.5.2024  திருச்சி பொன்மலை சங்கத்திடலில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு டிஆர்இயு பொதுச் செயலா ளர் வி.ஹரிலால் தலைமை வகித்தார். டிஆர்இயு துணை பொதுச் செயலாளர் ராஜா வரவேற்றார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ். ரெங்கராஜன், டிஆர்பியு தலைவர் இளங்கோ, டிஆர்இயு துணைத்தலைவர் பேபிஷகிலா, கோட்ட செய லாளர் கரிகாலன், ஒர்க்ஷாப் டிசிஷன் தலைவர் லெனின் ஆகியோர் பேசினர்.சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே. பத்மநாபன் சிறப்புரையாற்றி னார். அவர் பேசியதாவது:
போராட்டத்தின் மூலம் அரசை பணிய வைக்க முடி யும் என்பதுதான் 1974 போராட்டம். நமது எதிரியை புரிந்து கொண்டு அதற்கு எதிராக அனைவரையும் ஒன்று திரண்டு போராட கற்றுக் கொடுத்தது 1974 போராட்டம். 1974 வேலை நிறுத்தப் போராட்டம் முதல் அத்தியாயம் அல்ல; நிச்சய மாக கடைசி அத்தியாயமும் அல்ல.தொழிலாளர்களின் உரி மைகளுக்காக அன்றைய தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதால், அன்று பலமுறை பணிநீக்கம் செய்யப்பட்டனர். அந்த தலைமுறை தொழிலாளர் கள் போராட்டம் நடத்திய தால்தான் இன்று தொழிலா ளர்கள் ஒரு நோட்டீஸ் கூட வாங்காமல் ஓய்வுபெற்று செல்கிறார்கள் என்பதை இன்றைய தொழிலாளர் களுக்கு சொல்ல வேண்டி யுள்ளது. யார் நாற்காலியில் அமர்கிறார்கள் என்பது அல்ல கேள்வி. அதில் அமர்ந்து கொண்டு என்ன செய்கிறார்கள் என்பதுதான் கேள்வி. மதமும் சாதியும் ஒற்றுமையை சீர்குலைப்ப தை நாம் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். நாம் போராடுவோம், வெல்ல முடியும், வெற்றி பெறு வோம் என்பதுதான் உறுதி இவ்வாறு அவர் பேசினார்.
1974 வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் தங்களுடைய போராட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். முன்னதாக 1974 ரயில்வே வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 25 மூத்த தோழர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
டிஆர்இயு துணை பொதுச்செயலாளர் சரவ ணன் நன்றி கூறினார். டிஆர் இயு மற்றும் டிஆர்பியு நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தோழர் வி.பி.சிந்தன் 37ஆவது நினைவு தினம்

Previous article

சிஐடியு செய்தி ஜூன் மாத இதழ்

Next article

Comments

Comments are closed.