Articles

ரயில்வே தனியார்மயத்தை எதிர்த்து – DREU ஆர்ப்பாட்டம்.

0
ரயில்வே துறையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்,  எஸ்சி, எஸ்டி, ஓபிசி பணியிடங்களை  பறிப்பது கைவிட்டு காலிப்பணியிடங் களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஜனவரி 30அன்று   சென்னை சென்ட்ரல் எம்எம்சி அருகே  தட்சின ரயில்வே தொழிற்சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டிஆர்இயு செயல் தலைவர் அ.ஜானகிராமன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அ.சவுந்தரராசன் பேசுகையில், “பழைய ஓய்வூதியத்திற்கான போராட்டம் வலுவடைந்துள்ளது. இந்த போராட்டம் அரசியல் ரீதி யான அழுத்தம் கொடுத்து வருகி றது.  சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் அரசியல்கட்சிகள்  இந்த கோரிக்கையை ஏற்க வேண் டிய நிர்பந்தம் உருவாகி உள்ளது. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், சத்தீஷ்கர் போன்ற மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.அதற்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போட் டுள்ளது” என்றார். “புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மாநில அரசுகள் கொடுத்து வைத் துள்ள தொகையை ஒன்றிய அரசு  திருப்பித் தர மறுக்கிறது. பழைய ஓய்வூதிய திட்டம் அமலாக்கம் சாத்தி யமே இல்லை என்று பாஜக நாடாளுமன்றத்தில் கூறுகிறது. இதனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை ஏற்றுக் கொண்ட அரசு களால் அமல்படுத்த முடியாத நிலை  உள்ளது. இதை முறியடிக்க நமது போராட்டத்தை வலுப்படுத்து வோம்” என்றும் அவர் கூறினார். இந்தப் போராட்டத்தில் டிஆர்இயு பொதுச் செயலாளர் வி.ஹரிலால், ஓய்வூதியர் சங்க தலை வர் ஆர்.இளங்கோவன், ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் சத்தியமூர்த்தி, ஐஆர்டி எஸ்ஏ பொதுச் செயலாளர் கே.வி. ரமேஷ், ஏஐஎல்ஆர்எஸ்ஏ பொதுச் செயலாளர் கே.சி.ஜேம்ஸ் உள்ளிட் டோர் பேசினர்.

CITU Tamilnadu

தோழர் விளாடிமிர் லெனின் அவர்களின் நூறாவது நினைவு நாள்

Previous article

16 பிப்ரவரி 2024 நாடு தழுவிய அளவில் மாபெரும் அணிதிரட்டல்

Next article

Comments

Comments are closed.