உயர் பென்சனும் சந்தேகங்களும்
உயர் பென்சனுக்கு உச்ச நீதிமன்றத்தின் 4.11.2022 தீர்ப்பு அமலாக்குவது குறித்த சந்தேகங்களுக்கு EPFO வின் புதிய விளக்கம்
EPFO 13-12-2023 அன்று உயர் பென்சன் அமல் படுத்துவது தொடர்பாக 9 கேள்விகளுக்கு புதிய விளக்கம் அளித்துளது.அதனை இங்கே தருகிறோம்.
இந்த விளக்கமானது நிர்வகத்தின் கள அதிகாரிகள் செயல்படுத்துவதற்காக என்று அனுப்பி உள்ளது.
ஜாயின்ட் ஆப்ஷன்
தொழிலாளர்களும் நிர்வாகமும் ஜாயின்ட் ஆப்ஷன் 26(6) விதிப்படி கொடுத்ததற்கு எந்த ஆவணத்தை நிரூபணமாக எடுத்துக்கொள்வது?
1.விண்ணப்பதாரர்ஆப்ஷனை அங்கீகரிப்பதற்காக சமர்ப்பித்து இணையத்தில் பதிவேற்றிய அடிப்படையில் அனுமதி வழங்கியது வைப்புநிதி கள அலுவகத்தில் உள்ளது.அதனை ஆவணமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
2.அப்படி அனுமதி வழங்கியது கள அலுவகத்தில் கையில் இல்லை என்றால் கீழ்க்கண்டவற்றை சரிபார்க்கவேண்டும்.
அ.ஊழியரின் சம்பளம் சட்டப்படியான உச்சபட்ச சம்பளமான ரூ 5000/6500/15000 ஆகியவற்றை தாண்டி எப்போது அதிகரித்ததோ அப்போது முதல் அல்லது 16-11-95 முதல் அதிகரித்த சம்பளத்துக்கான வேலை செய்த நிர்வாகத்தின் பிஎஃப் பங்களிப்பை இன்றுவரை அல்லது ஓய்வு பெறும் வரைசெலுத்தப்பட்டுள்ளதா என்று பார்க்கவேண்டும்
ஆ. வேலை செய்யும் நிர்வாகம் செலுத்தவேண்டிய நிர்வாக கட்டணத்தை செலுத்தி இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்
இ.உயர்ந்த சம்பளத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட பங்களிப்பின் அடிப்படையில் வட்டி சேர்த்து ஊழியரின் வைப்பு நிதி கணக்கு நேர் செய்யப்பட்டுள்ளதா என்று பார்க்கவேண்டும்
ஈ.கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு ஆவணம் அனுமதிக்காக கூட்டு ஆப்ஷன் சமர்ப்பித்தபோது சமர்ப்பிக்கப்பட்டதா என்று பார்க்கவேண்டும்
#கூட்டு ஆப்ஷன் சமர்ப்பித்தபோது அத்துடன் வேலை செய்யும் நிர்வாகம்சமர்ப்பித்த சம்பள விவரங்கள்
# வேலை செய்யும் நிர்வாகம் அங்கீகரித்த சம்பள ஸ்லிப்
# கூட்டு விண்ணப்பமும் வேலை செய்யும் நிர்வாகத்தின் ஏற்புகடிதம் ஆகியவற்றின் நகல்
# 4-11-2022 க்கு முன்பு உயர் சம்பளத்திற்கு வைப்பு நிதி செலுத்தியதை காட்டும் வைப்பு நிதி அலுவலக கடிதம்
மேலே 2 வதில் குறிப்பிட்ட அம்சங்களில் தகுதி ஆனவர்கள் ஏற்கனவே உண்மை அல்லது உயர் சம்பளத்தின் அடிப்படையில் வைப்பு ந்தி செலுத்தி வந்தால் அல்லது ஓய்வு பெறும் வரை செலுத்தி இருந்தால் இதுவரை கூட்டு வேண்டுகோள் மற்றும் வேலை செய்யும் நிர்வாகத்தின் ஏற்புகடிதமும் சமர்ப்பிக்க வில்லை என்றால் தனது கடைசியாக வேலை செய்த நிர்வாகத்தின் மூலம் இறுதி செட்டில்மென்ட் பெறும்போது அதனை சமர்ப்பிக்கலாம்
கூட்டு விண்ணப்பமும் நிர்வாகத்தின் ஏற்புகடிதமும் அனுமதிக்காக உச்ச நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் உயர்ந்த சம்பளத்தின் அடிப்படையில் பென்சன் அனுமதிப்பதற்கு முன் சமர்ப்பிக்கலாம்.
2.இணையத்தில் விண்ணப்பித்தபோது கூட்டு ஆப்ஷனை அங்கீகாரத்துக்காக பதிவேற்றியபோது சாட்சிய ஆவணங்களை நிர்ரூபணமாக பதிவேற்றாமல் இருந்தால் இதற்காக விண்ணப்பத்தை நிராகரிக்கலாமா?
கூடாது.மண்டல வைப்பு நிதி அதிகாரி ஊழியர் பணி செய்யும் நிர்வாகத்திடமிருந்து முதலில் குறிப்பிட்ட ஆவணங்களை கேட்டு பெறவேன்டும்.இதர வகையில் தகுதி உடையது வினண்ணப்பம் என்றால் எக்காரணம் கொண்டும் விண்ணப்பத்தை நிராகரிக்கக்கூடாது.ஊழியர் வேலை செய்யும் நிர்வாகத்திடமிருந்து குறிப்பிட்ட ஏதாவது ஆவணத்தை கேட்டுப்பெறுவது மன்டல வைப்பு நிதி அதிகாரியின் கடமையாகும்.
விதிவிலக்களிக்கப்பட்ட வைப்பு நிதி நிறுவனங்கள்
- இந்த நிறுவனங்களின்இப்போதுள்ள உறுப்பினரோ முன்னாளைய உறுப்பினரோ வேலை செய்யும் நிறுவனத்திலிருந்து ட்ரஸ்டுக்கு கூட்டு வேண்டுகோள்மற்றும் நிர்வாகஏற்பு கடிதம் இன்னும் உயர் சம்பளத்திற்கு பங்களிப்பு செய்ததற்கு சமர்ப்பிக்க வில்லை என்றால் என்ன செய்வது?
முதல் மற்றும் இரண்டாம் கேள்விக்கு அளித்த பதில்தான் இதற்கும் பதில்.
4,5,6 எந்த தேதியில் பென்சன் தொடங்குகிறதோ அதைப்பொருத்து பென்சனபுல் சம்பளமும் பென்சனபுல் சர்வீசும் கணக்கிடப்படும்.பென்சனபுல் சம்பளம் என்பது 1-9-2014 க்கு முன்பு பென்சன் தொடங்கும் தேதியாக இருந்தால் அவரது 12 மாத உண்மை சம்பளத்தின் சராசரி எடுக்கப்படும்.அதன் பிறகு என்றால் 60 மாத உண்மை சம்பளத்தின் சராசரி தான் பென்சனபுல் சம்பளமாகும்.பென்சனபுல் சர்வீசும் வேலை செய்யும் நிறுவனம் 8.33சத நிறுவன பங்களிப்பு எத்தனை ஆண்டுகள் ட்ரஸ்டுக்கு அனுப்பபட்டதோ அதுதான் பென்சனபுல் சர்வீசு ஆகும்.
பென்சனபுல் சர்வீசை பென்சனபுல் சம்பளத்தால் பெருக்கி 70 ஆல் வகுக்கவேன்டும்.அதுதான் அவரது பென்சனாகும்.
7.1.9.2014 க்கு பின் ஓய்வு பெற்றவர்களின் பென்சனபுல் சம்பளம் எப்படி தீர்மானிக்கப்படும்?
I ஒருவர் 1-1-2015ல் 60 வயதில் ஓய்வு பெற்றார் என்போம்.ஆனால் அவர் 58 வயதில் ஓய்வு பெற்றார் என்று வைத்துக்கொள்ளப்படும்.அதனால் அவர் ஓய்வு பெற்றது 1-9-2014 க்கு முன்பு என வைத்துக்கொண்டு நிதியிலிருந்து வெளியேறிய கடைசி12 மாத சம்பளத்தின் சராசரி எடுத்துக்கொள்ளப்படும்.
II ஒருவர் 1-1-2012ல் 50 வயதில் ஓய்வு பெற்றாரென்று வைத்துக்கொள்வோம்.அவர் 58 வயதில் பென்சன் பெற ஆப்ஷன் கொடுக்கலாம்.அது 1-9-2014க்கு பிறகு வருகிறது.எனவே அவர் நிதியிலிருந்து வெளியேறிய கடைசி 60 மாத சம்பளத்தின் சராசரி எடுக்கப்படும்
8.எதிர் காலத்தில் உதாரணமாக 2030 ல் ஒருவர் ஓய்வு பெற்றால் அவரது பென்சன் எப்படி கணக்கிடப்படும்?
பென்சன் தொடங்கும் போது EPS 95 ன் விதி எதுவாக இருக்கிறதோ அதன்படி கணக்கிடப்படும்.
9.எனது பென்சன் பின்பாக்கி எனக்கு கொடுக்கப்படுமா அல்லது உயர்சம்பளத்து பங்களிப்புக்காக எடுத்துக்கொள்ளப்படுமா?
இருக்கிற நடைமுறைப்படி வருமானவரி பிடித்துக்கொண்டு கொடுக்கப்படும்.
ஆர்.இளங்கோவன்
Comments