தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள சிஐடியு தலைமையிலான கூட்டமைப்பு தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நலச்சங்கம் இணைந்து வேலைநிறுத்த நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
கோரிக்கைகள்-
* ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவக்கு!
*ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கு!
* இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பை உடனடியாக வழங்க வேண்டும்!
* காலி பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் முறையாக பணி வழங்க வேண்டும், கான்ட்ராக்ட் முறையைக் கைவிட வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த நோட்டீஸ் தமிழகம் முழுவதும் உள்ள 8 கோட்டம் உள்ளிட்ட 22 மண்டலங்கள் மற்றும் 330 மேற்பட்ட பணிமனைகளில் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.
சென்னையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் தோழர் கே.ஆறுமுக நயினார் தலைமையில் CITU, AITUC, INTUC ,HMS, MLF, TTSF, DWS உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நல சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் சங்கம் உள்ளிட்டு கலந்து கொண்டனர்
Comments