திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பாக இன்று 13/12/2023 கலெக்டர் அலுவலகத்தில் பேரூராட்சிகள் உதவி இயக்குனரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் (2023-24) உத்தரவின் படி,சுய உதவிகுழு தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலி ரூ.594 ம், டிபிசி ஊழியர்களுக்கு ரூ.455 ம், வழங்கிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.நிகழ்வில் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் கே.பிரபாகரன், உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர்கள் சி.பாலசந்திர போஸ், கலா, மணிமேகலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Comments