சிஐடியு கோவை மாவட்ட மாநாடு சனியன்று எழுச்சியுடன் துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் தொழிலாளர்கள் நலன் சார்ந்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
மசக்காளிபாளையம் ஹர்ஷா மஹாலில் நடைபெற்ற மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக தியாகி முத்துமேடையில் இருந்தும், சின்னியம்பாளையம் தியாகிகள் மேடையில் இருந்தும் தியாகிகள் நினைவு ஜோதியும், துடியலூரில் இருந்து மாவட்ட மாநாட்டில் ஏற்றப்படும் செங்கொடியும் கொண்டுவரப்பட்டது.
தியாகிகள் நினைவு ஜோதியை சிஐடியு மூத்த தலைவர் யு.கே.வெள்ளியங்கிரி உள்ளிட்ட தலைவர்கள் பெற்றுக்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து தொழிலாளி வர்க்கத்தின் செங்கொடியேற்றப்பட்டு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி மாநாடு எழுச்சியோடு துவங்கியது. சிஐடியு கோவை மாவட்ட தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். கே.ரத்தினகுமார் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். கே.மனோகரன் வரவேற்புரையாற்றினார். சிஐடியு அகில இந்திய துணை தலைவர் ஏ.கே.பத்மநாபன் மாநாட்டை துவக்கிவைத்து பேரூரையாற்றினார். மாநாட்டு வேலை, ஸ்தாபன அறிக்கையை மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்வைத்தார். வரவு செலவு அறிக்கையை பொருளாளர் ஆர்.வேலுசாமி முன்வைத்தார். மாநாட்டை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிஐடியு மாநில துணை தலைவர் எம்.சந்திரன் ஆகியோர் உரையாற்றினர். இதனைத்தொடர்ந்து பிரதிநிதிகள் விவாதம் துவங்கியது. இரண்டாவது நாள் ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து நடைபெறும் மாநாட்டில் தொழிலாளி வர்க்க நலன் சார்ந்து பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட உள்ளது. இதனையடுத்து புதிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட உள்ளது. மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் நிறைவுரையாற்றுகிறார். நிறைவாக மாநாட்டின் தீர்மானங்களை, அரசியல் நிலைப்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் விதமாக கோவை ஓப்ஸ் காலேஜ் பகுதியில் இருந்து பேரணியும், மசக்காளிபாளையத்தில் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. இதில் சிஐடியு அகில இந்திய துணைதலைவர் ஏ.கே.பத்மநாபன், சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர்.
All TUCITU-AIKS-AIAWUCITU-AITUCIn MediaJoint Struggles
Comments