திருச்சிராப்பள்ளி, நவ.28- சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத் தின் திருச்சி புறநகர் மாவட்ட மண்ணச்ச நல்லூர் பகுதி முதலாம் ஆண்டு பேரவை கூட்டம் எம்கேஎம் மினி மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட நிர்வாகி தண்ட பாணி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் நவமணி துவக்கவுரையாற்றி னார். ஆட்டோ சங்க புறநகர் மாவட்டச் செய லாளர் சம்பத், சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். பகுதிச் செயலாளர் ஹக்கீம் வரவேற்றார். பகுதித் தலைவர் மணிவண் ணன் நன்றி கூறினார். சிஐடியு புறநகர் மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம் நிறைவுரையாற்றினார். தலைவராக பி.மணிவண்ணன், செய லாளராக எஸ்.ஹக்கீம், பொருளாளராக எம்.மனோகரன் உள்பட 15 பேர் கொண்ட பகுதிக்குழு தேர்வு செய்யப்பட்டது. கூட்டத்தில், ஆன்லைன் மூலம் வாக னங்களுக்கு அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Comments