Struggles

தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம்

0

தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  5ஆவது நாளாக தொடர் வேலை நிறுத்த  போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு(சிஐடியு) சார்பில் என்.டி.பி.எல் அனல்மின் நிலையத்தில் தொழிலாளர் களின் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி அனல்மின் நிலையம் முன்பு பிப்ரவரி (13)ஆம் தேதி முதல் என் டி பி எல் திட்ட செயலாளர் அப்பாதுரை தலை மையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இப்போராட்டம் வெள்ளி யுடன் 5ஆவது நாளாக 100 மணி நேரத்தை தாண்டி நடைபெற்று வருகிறது.
தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு
இந்நிலையில், என்டிபிஎல் நிர்வாகம் சார்பில் வியாழனன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஒப்பந்த ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க முடியாது. மேலும், தொழிற்சாலையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் தாண்டி போராட்டம் நடத்தவும் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து , தொழிற்சாலை யில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம்  தலையில் நாற்காலிகளை சுமந்து கொண்டு ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் நடந்து சென்றனர். போராட்டத்தில்  சிஐடியு மாநிலச்  செயலாளர் ஆர்.ரசல், மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து, என்டிபிஎல் திட்டத் தலைவர் கணபதி சுரேஷ், சிஐடியு நிர்வாகிகள் முனியசாமி, பொன்ராஜ், காசி, வையணப்பெருமாள், நாகராஜன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனக ராஜ் போராட்டத்தை வாழ்த்தி பேசினார்.  மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.புவி ராஜ், புறநகர் செயலாளர் பா.ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.எஸ்.முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடங்கும் மின் உற்பத்தி
மேலும், ஊழியர்களின் தொடர் போராட்டம் காரணமாக சுமார் 420 மெகா வாட் மின்சார உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது. மேலும், கட்டுமான பணிக்காக வந்த வட மாநில தொழி லாளர்களை கொண்டு பாதுகாப்பின்றி ஆலையை தொடர்ந்து இயக்கி வருவ தாக ஒப்பந்த ஊழியர்கள் குற்றச்சாட்டி யுள்ளனர். மேலும், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகிகளுடன் மதுரையில் மண்டல தொழிலாளர் ஆணையர் அலுவல கத்தில் மத்திய தொழிலாளர் துணை தலைமை ஆணையர் அருண் தலைமை யில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
சிஐடியு வலியுறுத்தல்
இந்நிலையில், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தூத்துக்குடியில் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசனும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கான அனல் மின்நிலையம் 2015 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த என்.டி.பி.எல் நிர்வாகம்  நிரந்தர தொழிலாளர் ஒருவரையும் நியமனம் செய்யாமல் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன் அதிகாரிகள் 125 பேரை மட்டும் பணிக்கு அமர்த்திக்கொண்டு, சுமார்  1200 ஒப்பந்த தொழிலாளர்கள் மூலமாக மின் உற்பத்தியில்  ஈடுபட்டு வருகிறது. இந்த தொழிலாளருக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டு மென  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் மத்திய துணை தொழிலாளர் ஆணையரிடம்  கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன் பேரில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்விற்கு பிறகு 2021 ஏப்ரல் 30 ஆம்  தேதி நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாள ருக்கு வழங்கும் சம்பளத்தை என்.டி.பி.எல் ஒப்பந்த தொழிலாளருக்கும் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. நிர்வாகம் இந்த உத்தரவை அமலாக்காமல் மேல்முறையீடு செய்து தடை பெற்றுள்ளது. மேலும் மத்திய துணை தொழிலாளர் ஆணையரின் சமரசப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கா மல் புறக்கணித்து, தொடர்ந்து  தொழி லாளர் விரோத நடவடிக்கைகளில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.  நிர்வா கத்தின் இத்தகைய  நடவடிக்கையை கண்டித்து பிப்ரவரி 13 ஆம் தேதி காலை  முதல் ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு  ஆலை வாயிலில் பந்தல் அமைத்து போராடி வருகின்றனர்.
முன்மாதிரி நிறுவனமாக செயல்பட வேண்டிய என்.டி.பி.எல். நிர்வாகம் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மாறாக வெளியாட்களை வேலைக்கு எடுப்பதும், போராடும் தொழிலாளர்களை அச்சுறுத்தும் வேலை யிலும் ஈடுபட்டு வருவது கண்ட னத்திற்குரியது. இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் மத்திய துணைத்தலைமை தொழிலாளர் ஆணையர் ஆகியோர் தலையிட்டும் என்.டி.பி.எல். நிர்வாகம் தனது பிடிவாதப் போக்கை மாற்றிக்கொள்ளாமல் இருந்து வருகிறது.  மேலும் போராட்டத் தை உடைக்கும் வகையில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் நீதிமன்றம், என்.டி.பி.எல். ஆலையிலிருந்து ஆயிரம்  மீட்டர் தொலைவில் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர அனுமதித்துள் ளது. இப்பிரச்சனையில் தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு, நெய்வேலி அனல் மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் வள்ளூர்  அனல் மின் நிலைய ஒப்பந்தத் தொழி லாளருக்கு வழங்கப்படும் ஊதியத்தை யும், இதர சட்ட சலுகைகளையும்  என்.டி.பி.எல். ஒப்பந்தத் தொழி லாளருக்கும் வழங்கி வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து தொழிலமைதியை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

CITU Tamilnadu

தமிழ்நாடு மின் ஊழியர் மத்தியமைப்பு சார்பாக தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம்

Previous article

பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த, பலப்படுத்த வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மினி மாரத்தான்

Next article

Comments

Comments are closed.