ஸ்தாபன மாநாடுகள்

அங்கன்வாடி ஊழியர்கள்-உதவி யாளர்கள் சம்மேளனத்தின் 10-ஆவது அகில இந்திய மாநாடு

0

அங்கன்வாடி ஊழியர்கள்-உதவி யாளர்கள் சம்மேளனத்தின் 10-ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் டிச.6-ஆம் தேதி தொடங்கி டிச.9-ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த மாநாட்டை இந்திய தொழிற்சங்க மையத்தின் அகில இந்தியத் தலைவர் ஹேமலதா, பொதுச் செயலாளர் தபன்சென், தேசியச் செய லாளர் ஆர்.கருமலையான், தமிழ்நாடு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், செயலாளர் ஜி.சுகுமாறன், அங்கன் வாடி ஊழியர்-உதவியாளர் சம்மேளன அகில இந்தியத் தலைவர் உஷாராணி, பொதுச்செயலாளர் ஏ.ஆர்.சிந்து, தமிழ்நாடு மாநிலத் தலை வர் டி.டெய்சி, செயலாளர் ஆர்.ரத்தின மாலா உட்பட நாடு முழுவதுமிருந்து 650 பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.
10-ஆவது அகில இந்திய மாநாட்டில் அகில இந்தியத் தலைவ ராக உஷாராணி, பொதுச் செயலாள ராக ஏ.ஆர்.சிந்து பொருளாளராக அஞ்சுமொய்னி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவர்களாக ஒன்பது பேர், செயலாளர்களாக 13 பேர்,  நிரந்தர அழைப்பாளர்களாக இருவர்,  அகில இந்திய குழு உறுப்பினர்களாக 50 பேர் என மொத்தம் 77 பேர் தேர்வு  செய்யப்பட்டனர். துணைத் தலைவர்கள்: எஸ்.வர லெட்சுமி (கர்நாடகம்), ஜி.பேபிராணி (ஆந்திரம்), இந்திராணி முகர்ஜி (மேற்குவங்கம்), வீணாகுப்தா (உத்தரப்பிரதேசம்), ஜெயாபர்மன் (திரிபுரா), மேரிஜோப் (கேரளம்), சுபா ஷமிம் (மகாராஷ்டிரா), ஹர்ஜித் கௌர் (பஞ்சாப்), ஷிம்ஜிலா(கேரளம்).
செயலாளர்களாக  கே.சுப்புரா வம்மா (ஆந்திரம்), இந்திராநேவார் (அஸ்ஸாம்), எச்.எச்.சுனந்தா (கர்நாடகம்), கே.கே.பிரசன்னகுமாரி (கேரளம்), கிஷோரிவர்மா (மத்தியப் பிரதேசம்), வீணாஷர்மா (இமாச்சலம்), பி.ஜெயலெட்சுமி (தெலுங்கானா), டி.டெய்சி (தமிழ்நாடு), ஷீலாமண்டல் (மேற்கு வங்கம்), மந்தீப் (பஞ்சாப்), கைலாஷ்ரோஹித் (குஜராத்), ராதாஷன்குர்வார் (மகாராஷ்டிரம்). உறுப்பினர்களாக தமிழகத்தைச் சேர்ந்த ரத்னமாலா, தேவமணி உட்பட  ஐம்பது பேர் தேர்வு செய்யப்பட்டனர். நிரந்தர அழைப்பாளர்கள்: ரத்னா தத்தா (மேற்குவங்கம்), நிலிமா மைத்ரா (ஸ்தாபகத் தலைவர்).
பேரணி
அகில இந்திய அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க பத்தாவது அகில இந்திய மாநாட்டு பேரணி மதுரை காள வாசல் பகுதியில் இருந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்க டேசன் துவக்கி வைத்தார் பேரணி யில் அகில இந்திய தலைவர் உஷாராணி அகில இந்திய பொதுச் செயலாளர் சிந்து சிஐடியு அகில இந் திய செயலாளர் ஒருவரான கருமலை யான் உள்ளிட்ட பல்லாயிரக்கணக் கான கலந்து கொண்டனர்.

அங்கன்வாடி ஊழியர் மாநாடு உ.வாசுகி பேச்சு
பெ.சண்முகம் பேட்டி

மனுஸ்மிருதியை கடைப்பிடிக்கும் பாஜக பயாஸ்கோப் பெட்டியை வைத்து படம்காட்டுகிறது.நவீன இந்தியாவில்  நவீன செல்போண்கள், கணினிகள், தொழில்நுட்பம், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் மேம்பட்டிருந்தாலும் பாஜகவின் பழமையான சிந்தனை மட்டும் மாறவில்லை. எந்தப் பிரச்சனையையும் மதத்தின் அடிப்படையிலேயே அணுகுகின்றனர் என்றார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி.
அங்கன்வாடி ஊழியர்-உதவியாளர் சம்மேளனத்தில் 10-ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்றுவருகிறது. மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இரண்டாம் நாள் மாநாட்டை வாழ்த்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி மேலும் பேசியதாவது:-
சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் குழந்தைகள்-அவர்களின்  பெற்றோருடன் நேரடியாக, நெருக்கமாக இணைந்துள்ளவர்கள் நீங்கள். ஒரு மனிதன் அடிப்படைத் தேவையை நிறைவேற்றி வருகிறீர்கள். ஆனால், உங்களது கோரிக்கைகளை அரசு இன்னும் நிறைவேற்ற மறுத்துவருகிறது. கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறீர்கள். போராட்டங்கள் தொடர்ந்தாலும் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் ஒன்றிய அரசின் கார்ப்பரேட் நலன் சார்ந்த, பணக்காரர்களுக்கு ஆதரவான கொள்கைகள் தான். விலைவாசி தொடர்ந்து அதிகரிப்பதால் ரேஷனில் மண்ணெண்ணெய் வெட்டப்படுகிறது. கேஸ் விலை உயர்வோ கையை மீறிச் சென்றுவிட்டது. இதைப்பற்றி கவலைப்படாத மோடி மக்கள் விறகுகள், சுள்ளிகளை வைத்து எரிக்கும் பழைய முறைக்கு திரும்புவதையே விரும்புகிறார்.வறுமையை ஒழிக்க, அங்கன்வாடி குழந்தைகள் எடையுள்ளவர்களாக, வளர்ச்சி பெற்றவர்களுக்காக மாற பஜனைகள் நடத்துங்கள். பஜனை பாடல்களைப் பாடுங்கள் என்கிறார் மோடி. ஏழை-எளிய மக்களுக்கு பையாஸ் கோப் பெட்டியை வைத்து படம் காட்டிக் கொண்டிருக்கிறார். ஏழை-எளிய மக்களின் வாழ்க்கையில் வசந்தகாலம் வந்து விட்டது என்கிறார். உண்மையில் வந்தது சுனாமி போன்ற பேரழிவுகளைத் தான் மக்கள் சந்திக்கிறார்கள். போதிய வருமானமின்றி துன்பத்தில் உழன்று கொண்டிருக்கிறார்கள்.
விலைவாசி உயர்வும், வேலையில்லா திண்டாட்டமும், கால நிலைமாற்றமும் சாதி பார்த்து, மதம் பார்த்து வருவதில்லை. அது அனைத்து மதத்தினரையும் பாதிப்புக்குள்ளாக்கிவருகிறது.  பிரச்சனைகளை பிரச்சனையாகப் பார்க்க மறுத்து, நாம் கேள்வியெழுப்பினால் அதற்கு கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தான் காரணம் என்கிறது ஒன்றிய அரசு. வாய்ஜாலத்தாலும், வெற்றுப் பேச்சுக்களாலும் மக்களை ஏமாற்றுகிறது மோடி அரசு.
எந்தப் பிரச்சனையையும் மதத்தின் அடிப்படையில மனுஸ்மிருதியின் அடிப்படையிலேயே அணுகுகின்றனர். சமீபத்தில் அஃப்தாப் ஷ்ரத்தா வாக்கர் ஒரு பெண்ணை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்தார். கொலையுண்டது ஒரு பெண். கொலை செய்தவர் அமரா, அக்பரா, அந்தோணியா என்பது பிரச்சனையல்ல. குற்றம் குற்றமே குற்றவாளி தண்டிக்கப்படவேணடும். ஆனால், பாஜக கொலையுண்ட பெண்ணைப் பற்றிக் கவலைப்படாமல் கொலை செய்தவர் ஒரு இஸ்லாமியர் என பிரச்சாரம் செய்கிறது. இந்து, முஸ்லிம், கிறித்தவர் என பிளவுபடுத்துவதில் தான் ஒன்றிய அரசு கவனம் செலுத்துகிறது.
நவீன இந்தியாவில்  நவீன செல்போண்கள், கணினிகள், தொழில்நுட்பம், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் மேம்பட்டிருந்தாலும் பாஜகவின் பழமையான சிந்தனை மட்டும் மாறவில்லை.
பெண்கள் கண்ணியமான வாழ்க்கையைத் தொடரவும் கல்வி, வேலைவாய்ப்புகளில் சம உரிமை பெறவும் இந்தியாவின் மிகப்பெரிய பெண்கள் அமைப்பான அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் போராடி வருகிறது. அங்கன்வாடி ஊழியர்கள்  தங்களது கோரிக்கைகளுக்காகப் போராட வேண்டும். சம உரிமை போராட்டத்தில் மாதர் சங்கத்துடன் கைகோர்க்க வேண்டுமென்றார்.
.
முன்னதாக பெ.சண்முகம் மதுரையில் நடைபெற்றுவரும் அங்கன்வாடி ஊழியர் உதவியாளர் சம்மேளனத்தின் 10-ஆவது அகில இந்திய மாநாட்டை வாழ்த்திப் பேசினார். அப்போது, “மனிதனுக்கு நரம்பு மண்டலம் எவ்வளவு முக்கியமோ, அதுபோல் நாட்டின் எதிர்கால சந்ததியினரை போஷாக்குள்ளவர்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி ஊழியர்கள் நாட்டின் நரம்பு மண்டலமாக பணியாற்றி வருகிறார்கள்.
குழந்தைகள் நலனா கார்ப்பரேட்டுகள் நலனா….
குழந்தைகள் நலத்திட்டங்களுக்கான நிதி 2020-2021-ஆம் ஆண்டில் 30 சதவீதம் வெட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கார்ப்பரேட்டுகளுக்கு பல லட்சம் கோடி கடன் வழங்கப்படுகிறது. கொடுத்த கடனும் தள்ளுபடி செய்யப்படுகிறது.இரத்தச்சோகை, ஊட்டச்சத்து குறைவின்மை, எடையிண்மை, வளர்ச்சியின்மையால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். குழந்தைகளின் நலனை விட கார்ப்பரேட்களின் நலன் தான் மோடி அரசுக்கு முக்கியம்.குழந்தைகளை அறிவுக்கூர்மையுள்ளவர்களாக மாற்றிவரும் அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குழந்தைகளின் நலத்திட்டத்தை வலுவுள்ளதாக்க பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றார்.

CITU Tamilnadu

மக்கள் சார்பு கொள்கைகளுக்காக ஒன்றுபட்டு போராட வேண்டும் என்ற முழுக்கத்துடன் சிஐடியு மாநாடு நிறைவு பெற்றது.

Next article

Comments

Comments are closed.